×

1950ம் ஆண்டு ஆணைப்படி எஸ்சி, எஸ்டி கணக்கெடுப்பு: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: ‘மக்கள்தொகை 2021 கணக்கெடுப்பின்போது, 1950ம் ஆண்டின் அரசியலமைப்பு ஆணைகளின் மூலம் அறிவிக்கப்பட்ட எஸ்சி மற்றும் எஸ்டி இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கணக்கு எடுக்கப்படுவார்கள்,’ என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு- 2021 உடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதா? என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வ அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

மக்கள்தொகை கணக்கெடுப்பில், அரசியலமைப்பு (அட்டவணை சாதி) ஆணை 1950 மற்றும் அரசியலமைப்பு (அட்டவணை பழங்குடியினர்) ஆணை, 1950 ஆகியவற்றின்படி, எஸ்சி மற்றும் எஸ்டி வகுப்பினர் பட்டியல் அவ்வப்போது திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. சாதி தரவை வெளியிட எந்த முன்மொழிவும் இல்லை. மக்கள்தொகை- 2021 கணக்கெடுப்பின்போது, 1950ம் ஆண்டின் அரசியலமைப்பு ஆணைகளின்  மூலம் அறிவிக்கப்பட்ட எஸ்சி மற்றும் எஸ்டிகள் பிரிவுகளை சேர்ந்தர்ந்தவர்கள் மட்டுமே கணக்கெடுக்கப்படுவார்கள்.

 கொரோனா காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு நாட்டில் முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நடத்தப்படும். சுய-கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  தரவு சேகரிப்புக்கான மொபைல் அப்ளிகேஷன் மற்றும் பல்வேறு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் தனியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : SC , SC, SD Survey, Parliament, Government of the United States
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; 50...