×

பிஎஸ்ஜி அணியில் லியோனல் மெஸ்ஸி

பாரிஸ்: அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி (34 வயது), ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பார்சிலோனா கிளப் அணிக்காக தனது 13வது வயதில் இருந்து தற்போது வரை விளையாடி வந்தார். அந்த அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ள மெஸ்ஸி, சமீபத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலான ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து வேறு அணியில் சேர முடிவு செய்தார். பார்சிலோனா அணியில் இருந்து விலகுவதை கண்ணீர் மல்க அறிவித்த அவர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கிளப் அணியில் சேர உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், பிஎஸ்ஜி அணியில் மெஸ்ஸி இணைவதை அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி நேற்று உறுதி செய்துள்ளார். 2 ஆண்டுக்கான புதிய ஒப்பந்தத்தில் மெஸ்ஸி இன்று கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு ஆண்டு ஊதியமாக, வரிகள் போக சுமார் ₹257 கோடி கிடைக்கும் எனத் தெரிகிறது. பிஎஸ்ஜி அணியில் ஏற்கனவே நட்சத்திர வீரர்கள் நெய்மர், எம்பாப்பே ஆகியோர் உள்ள நிலையில், மெஸ்ஸியும் இணைவது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Lionel Messi ,PSG , PSG team, Lionel Messi, football
× RELATED சில்லிபாயின்ட்..