இந்தியாவுடன் 2வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மொயீன் அலி சேர்ப்பு

லண்டன்: இந்திய அணியுடன் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இங்கிலாந்து அணியில், ஆல் ரவுண்டர் மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்த நிலையில், 2வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 18 வீரர்கள் அடங்கிய இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டர் மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக மொயீன் அலி சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற எந்த அணிகளையும் விட, இந்தியாவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட்களில் அவர் 673 ரன் மற்றும் 49 விக்கெட் எடுத்துள்ளார்.  இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, டொமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராடு, ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஸாக் கிராவ்லி, சாம் கரன், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், ஜாக் லீச், கிரெய்க் ஓவர்டன், ஆலிவர் போப், ஆலிவர் ராபின்சன், டொமினிக் சிப்லி, மார்க் வுட்.

Related Stories:

More
>