ஐசிசி உலக கோப்பை டி20, இந்தியா டூர்; நியூசிலாந்து அணி அறிவிப்பு: டெய்லர் சேர்க்கப்படவில்லை

வெலிங்டன்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் மற்றும் இந்திய சுற்றுப்பயணத்துக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற இருந்த இப்போட்டித் தொடர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ள உலக கோப்பை டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேன் வில்லியம்சன் தலைமையில் மொத்தம் 15 வீரர்கள் அடங்கிய அணியில், அனுபவ வீரர் ராஸ் டெய்லர், கோலின் டி கிராண்ட்ஹோம், ஃபின் ஆலன் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.

உலக கோப்பை தொடர் முடிந்ததும் இதே அணியே இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டிகளில் விளையாடும் என்று அறிவித்துள்ள நியூசி. கிரிக்கெட் வாரியம், வங்கதேசத்துடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும், பாகிஸ்தான் அணியுடன் டி20 தொடரிலும் விளையாட உள்ள அணிகளையும் அறிவித்துள்ளது. இந்த தொடர்களில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு டாம் லாதம் தலைமையில் இளம் அணி களமிறங்க உள்ளது.

உலக கோப்பை டி20, இந்திய டூருக்கான நியூசி. அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்டில், டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டிவோன் கான்வே, லோக்கி பெர்குசன், மார்டின் கப்தில், கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் செய்பெர்ட் (விக்கெட் கீப்பர்), ஈஷ் சோதி, டிம் சவுத்தீ. மாற்று வீரர்: ஆடம் மில்னி.

Related Stories: