×

ஜம்முவில் ராகுல்காந்தி பேச்சு நாட்டை பிரிக்கும் மோடியின் கொள்கையை காங். எதிர்க்கும்

ஸ்ரீநகர்: ‘இந்தியாவை பிரிக்கும் பிரதமரின் கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி இரண்டு நாள் பயணமான நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீர் சென்றார். நேற்று முன்தினம் கட்சியின் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் தலைவர் குலாம் ஆகமத் மிர்ரின் மகன் திருமணத்தில் கலந்து கொண்டார். மேலும் காங்கிரஸ் பவன் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

நேற்று காலை கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரக்ன்யா தேவி கோயில் எனப்படும் கீர் பவானி கோயிலுக்கு ராகுல் காந்தி சென்று தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து,  அருகில் இருக்கும் மிர் பாபா ஹைதர் கோயில் மற்றும் தால் ஏரி கரையில் இருக்கும் ஹஸ்ரத்பால் தர்காவிற்கும் சென்றார். அங்கு, கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகையில், ‘‘எங்கள் குடும்பம் டெல்லியில் வசிக்கிறது. அதற்கு முன் அலகாபாத்திலும் அதற்கு முன் காஷ்மீரிலும் வசித்து வந்தது. காஷ்மீர் மக்களின் பழக்க வழக்கங்கள், சிந்தனை ஓட்டம் ஆகியவை என்னிடமும் உள்ளது. காஷ்மீர் மக்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர்.  நான் உங்களுக்கு துணை நிற்பேன், உங்களுக்கான மாநில  அந்தஸ்தைப் பெற நான் போராடுவேன். பிரதமருக்கு எதிராக போராடுவேன் மற்றும் நாம் பிரதமர் மோடியின் பிரித்தாளும் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். காங்கிரஸ் கட்சியானது அமைதி மற்றும் அன்புக்கான ராணுவமாகும்’’ என்றார்.

Tags : Rahul Gandhi ,Jammu Modi , Jammu, Rahul Khan, Modi,Policy
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...