×

ஜார்க்கண்ட் முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், ‘‘கூட்டாட்சி தத்துவம், மதச்சார்ப்பின்மைக்கான வலிமை மிகுந்த குரல்களில் ஒன்றாக வளர்ந்து வரும், பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் தலைவராக விளங்கும் எனது சகோதரரும் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் பிறந்தநாளில் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : MK Stalin ,Chief Minister ,Jharkhand , Happy Birthday to MK Stalin, Chief Minister of Jharkhand
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...