×

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு தொடர்புள்ள நிறுவனங்கள் 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி: பரபரப்பு தகவல்கள்

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பிவேலுமணி, அவரது சகோதரர் அன்பரசு, கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவெட் லிமிடெட், கேசிபி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சந்திரபிரகாஷ், கேசிபி நிறுவனத்தின் இயக்குனர்   சந்திரசேகர், எஸ்பி பில்டர்ஸ் முருகேசன், ஜேசு ராபர்ட்ராஜா, ஆக் டெக் மிஷினரி காம்போனேன்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட், கான்ஸ்ட்ரானிக் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட், கான்ட்ரோ மால் குட் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீமகா கணபதி ஜீவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆலயம் பவுண்டேஷன் பிரைவேட் லிமிடெட், வைடூரியா ஹோட்டல் பிரைவேட் லிமிடெட், ரத்னா லட்சுமி ஹோட்டல் பிரைவேட் லிமிடெட், ஆலம் கோல்டு மற்றும் டைமண்ட் பிரைவேட் லிமிடெட், ஏஆர்இஎஸ்பிஇ இன்ப்ரா பிரைவேட் லிமிடெட், செந்தில் அன்கோ, சிஆர் கன்ஸ்ட்ரக்‌ஷன் உரிமையாளர் கு.ராஜன் உட்பட 7 பேர் மீதும் 10 நிறுவனங்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த 7 பேருக்கும், 10 நிறுவனத்துக்கும் முறைகேடாக ஒப்பந்தங்கள் கொடுத்தது அம்பலமாகியுள்ளது. ஒப்பந்தத்தில் ஒரே கணினியில் இருந்து டெண்டர் கோரியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் முன்னாள் அமைச்சர் எஸ்.பிவேலுமணிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திலேயே அரசு வளர்ச்சி கண்டுள்ளது. வர்தன் இன்ப்ராக்ஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் வருவாய் கடந்த 2012-13ல் ரூ.2.02 கோடியாக இருந்த நிலையில் 2018-19ல்  ரூ.66.72 கோடியாக அதிகரித்துள்ளது. சி.ஆர் கட்டுமான நிறுவனத்தின் வருவாய் கடந்த 2012-13ல் ரூ.38 லட்சமாக இருந்த நிலையில் 2018-19ல் ரூ.43.56  கோடியாகவும், கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் வருவாய் கடந்த 2012-2013ல்  ரூ.42.54 கோடியில் இருந்து 2018-19ல் ரூ.453.92 கோடியாக அதிகரித்துள்ளது.

ஏஸ் டெக் நிறுவனத்தின் வருவாய் 2012-13ல் ரூ34.20 கோடியில் இருந்து 2018-19ல்  ரூ.155.42 கோடியாகவும், செந்தில் அன்கோ நிறுவனத்தின் வருவாய் 2012-13ல் ரூ.7.68 கோடியில் இருந்து 2018-2019ல் ரூ.16.28 கோடியாகவும், ஆலயம் பவுண்டேஷன் நிறுவனத்தின் வருவாய் 2012-13ல் ரூ.55 லட்சமாக இருந்த நிலையில்  2018-19ல் ரூ.15.05 கோடியாகவும், 2013ல் தொடங்கப்பட்ட ஒசூர் கட்டுமான நிறுவனத்தின் வருவாய் ரூ.93 லட்சத்தில் இருந்து 2017-18ல் ரூ.19.61 கோடியாக  உயர்ந்துள்ளது. 2014ல் தொடங்கப்பட்ட கான்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.86 லட்சத்தில் இருந்து 2017-18ல் ரூ.42.11 கோடியாகவும், கான்ஸ்டரா மெயில் குட்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.84 லட்சத்தில் இருந்து ஒரே ஆண்டில் ரூ.3.14 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆலம் கோல்டு மற்றும் டைமண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம்  தொடங்கிய முதல் ஆண்டே 100 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் ஈட்டியுள்ளதாக  கூறப்பட்டுள்ளது. அந்த நிதியாண்டிலேயே ரூ.106 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது. 2019-20 நிதியாண்டில் ரூ.160.60 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரே ஆண்டில் 50.21 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
 
* 2012 -2013ல் இருந்த வருவாயை விட 2018-19 வரை கீழ்க்கண்ட நிறுவனங்கள் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது.
நிறுவனம்    வளர்ச்சி விகிதம்
வர்தன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்    3,100%
சி.ஆர். கன்ஸ்ட்ரக்‌ஷன்    11,363%
கேசிபி இன்ஜினியர்ஸ்    967%
ஆலயம் பவுண்டேஷன்    2,636%
ஏஸ்டெக் மெசினரி காம்பனன்ட்ஸ்    354%
பி செந்தில் அன்கோ    112%
ஒசூர் பில்டர்ஸ் (2015ல் தொடக்கம்)    2,008%
கன்ஸ்ட்ரோனிக்ஸ் இந்தியா (2014ல் தொடக்கம்)    4,796%

Tags : SP Velumani , Companies associated with former minister SP Velumani grow exponentially in 5 years: sensational news
× RELATED அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்ட பந்தலில் தீ விபத்து