×

மறைந்த கன்னட நடிகர் வளர்த்த நாய் மரணம்

பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் செல்லமாக வளர்த்து வந்த நாய், திடீரென உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். பிரபல கன்னட நடிகர் மற்றும் கர்நாடக முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ் (66), பெங்களூருவில் கடந்த 2018 நவம்பர் 28ம் தேதி காலமானார். சிறுநீரக நோய் காரணமாக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் உடல்நிலை தேறிய நிலையில், பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். நடிகர் அம்பரீஷ் உயிருடன் இருக்கும் ேபாது ‘கன்வார்’ என்ற உயர்ரக நாயை வளர்த்து வந்தார். அவர் நடைப்பயிற்சிக்கு செல்லும் போதெல்லாம் உடன் கன்வாரை அழைத்துச் செல்வார். ஆனால், தற்போது அந்த நாயும் இறந்துவிட்டது. இதுகுறித்து அம்பரீஷின் நண்பர் ஸ்ரீனிவாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘மறைந்த நடிகர் அம்பரீஷ் வளர்த்து வந்த கன்வார் என்ற நாய் இறந்துவிட்டது. அவர் ஒவ்வொரு நாளும் கன்வாரை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வார். இந்த நாய் அம்பரீஷுடன் மிகவும் அன்புடன் இருந்தது. அம்பரீஷ் இறந்த பின்னர் இந்த நாய் சரியாக சாப்பிடவில்லை. கன்வாரின் மறைவால், அம்பரீஷின் குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர்’ என்று பதிவிட்டுள்ளார்….

The post மறைந்த கன்னட நடிகர் வளர்த்த நாய் மரணம் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Ambareesh ,Karnataka ,
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு...