×

ஆஸ்திரேலியாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மகன் உல்லாச வாழ்க்கை

ஆஸ்திரேலியா: சூயஸ் என்கிற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் விநியோகம் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் கோவையில் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வந்த போது, அவர்களுடன் ஆஸ்திரேலியாவை பார்க்க சென்றது தான் வேலுமணியின் முதல் வெளிநாட்டு பயணம். சூயஸ் நிறுவனத்திற்கும் அமைச்சர் வேலுமணிக்கும் இப்படியான தொடர்பு இருப்பதால், தமிழ்நாட்டில் கொரோனா தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த நேரத்தில் தன் மகன் விகாஸ் வேலுமணியை பாதிப்பு அதிகமில்லாத ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தார்.

பொறியியல் பட்டதாரியான விகாஸ் வேலுமணி சூயஸ் நிறுவனத்தின் தயவில் ஆஸ்திரேலியாவில் உல்லாச வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார் . அங்கு சுற்றுவதற்காக தனியாக குட்டி விமானம் ஒன்று ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. விமானம் மட்டுமல்ல ஹெலிகாப்டர், ஜீப் என பயணம் செய்து பீச், போட்டோசூட் என ஜாலியாக பொழுதை போக்கிக்கொண்டே வேலுமணியின் வியாபார நடவடிக்கைகளையும் கவனித்து கொண்டிருக்கிறார் விகாஸ்.

Tags : minister ,Valencia ,Australia , Australia, Velumani, son, recreational life
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...