பீகார் தேர்தலில் குற்றப்பின்னணி வேட்பாளர்கள் குறித்த விவரங்களை வெளியிடாத பாஜக, காங்கிரஸ் உட்பட 8 கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அபராதம்

டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தலில் கட்சியின் குற்றப்பின்னணி வேட்பாளர்கள் குறித்த விவரங்களை வெளியிடாத பாஜக, காங்கிரஸ் உட்பட 8 கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. பாஜக, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட், லோக் ஜனசக்தி கட்சிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது. 2020 தீர்ப்பின்படி குற்றப்பின்னணி வேட்பாளர்களின் விவரத்தை கட்சி இணையதளம், சமூக வலைதள பக்கங்கள் உள்ளூர் நாளிதழில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: