×

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரம் :ஐசிசி வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

டெல்லி : 2028ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட சில நாடுகளே விளையாடி வரும் கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்கில் கடைசியாக 1900ம் ஆண்டு இடம் பிடித்தது. கிரிக்கெட்டை தோற்று வித்ததாக கூறி வரும்  கிரேட் பிரிட்டன் அப்போது பிரான்சுடன் விளையாடியது. அதன்பிறகு கிரிக்கெட் விளையாட்டு எந்த ஒரு ஒலிம்பிக்கிலும் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டையும் ஒலிம்பிக்கில் சேர்க்கக்கோரி ரசிகர்கள் அவ்வபோது கோரிக்கைகளை வைத்து வந்தனர். தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கின் தாக்கத்தால் அது மேலும் சூடு பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டையும் இணைப்பதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் ஐசிசி இன்று ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் 2028ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

அதன்பின்னர் கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்கில் ஒரு விளையாட்டாக தொடர்ந்து இடம் பிடிக்கும் என்றும் ஐசிசி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஐசிசி தலைவர் க்ரேக் பார்க்ளே, கிரிக்கெட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒலிம்பிக் மிகப்பெரும் உதவியாக இருக்கும் என நாங்கள் நினைக்கிறோம். நம் கிரிக்கெட்டும் ஒலிம்பிக்கில் ஒன்றியுள்ளது,என்றார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Tags : 2028 Olympics ,ICC , 2028 ஒலிம்பிக்
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...