சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை: சர்ச்சைக்குள்ளான வகையில் பேசியதால் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

 

மனுவில், தாம் பேசியதில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெளியிட்டு தவறான புரிதல்களை ஏற்படுத்தும் வகையில் பரப்பியதாகவும், தாம் பேசியதுக்கு வருத்தம் தெரிவித்து மற்றொரு வீடியோ வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது உடல்நலனையும் கருத்திக்கொணடு ஜாமீன் வழங்கக்கோரியும் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை நடத்திய நீதிபதிகள், வயது முதிர்ந்தவராகவும், இதய நோயாளியாகவும் இருப்பதால் நிபந்தனை ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தனர்.

மேலும் திருச்சி தில்லை நகர் காவல்நிலையத்தில் தினமும் கையளித்திட வேண்டும். வரும் காலங்களில் மதம், அரசியல், பிரச்சனைகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது எனவும் ஐகோர்ட் கிளை அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: