ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை: சர்ச்சைக்குள்ளான வகையில் பேசியதால் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தவராகவும், இதய நோயாளியாகவும் இருப்பதால் நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி தில்லை நகர் காவல்நிலையத்தில் தினமும் கையளித்திட வேண்டும். வரும் காலங்களில் மதம், அரசியல், பிரச்சனைகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது எனவும் ஐகோர்ட் கிளை அறிவுரை வழங்கியுள்ளது.

Related Stories: