×

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்: முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்  நடைபெறுகிறது. நாளை நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. பெகாஸஸ் விவகாரம், விவசாயப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் முடங்கி உள்ளன.

இந்த கூட்டத்தொடரின் போது, மருத்துவம், மின்சாரம், தொழில்நுட்பம், மீன்வளம், ஆயுத தொழிற்சாலை உள்ளிட்டவை தொடர்பான 19 மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், கடும் அமளி காரணமாக இதனை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி, மசோதாக்கள் உள்ளிட்டவைகள் பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பாராளுமன்றம் முடங்கியுள்ளது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Tags : Union Cabinet meeting ,Narendra Modi , Modi, Union Cabinet, meeting, key decisions
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...