×

ஒரே ஆண்டில் ரூ.100 கோடி வருவாய் ... அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களின் அசுர வளர்ச்சி

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களின் மின்னல் வேக வளர்ச்சி குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 35 இடங்கள், சென்னையில் 16 இடங்கள் மற்றும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா 1 இடம் உட்பட மொத்தம் 53 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்த போது அவருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு மட்டுமே அதிக அளவில் டெண்டர்கள் கொடுத்ததும் பிற நிறுவனங்களை புறக்கணித்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்பட 17 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

இந்த 17 பேரில் நிறுவனங்களும்,நிறுவனங்களின் பங்குதாரர்கள் மற்றும் நிறுவனர்களும் அடங்குவர். இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் வருவாய் மின்னல் வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமான கருதப்படுவதாக குற்றம்சாட்டப்படும் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில்

*Aalam Gold and Diamonds Pvt Ltd நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டே 100 கோடி ரூபாய்க்கு வருமானம் ஈட்டியுள்ளது.

*Vardhan Infrastructure-ன் 2012-2013ல் ஆண்டு வருமானம் ரூ.2 கோடியாக இருந்த நிலையில், 2018-2019ல் ரூ.66.72 கோடியாக உள்ளது.

*2012ல் 38 லட்சமாக இருந்த CR Constructions-ன் வளர்ச்சி 2018ல் ரூ.43.56 கோடியானது.

*2012ல் ரூ.42 கோடிக்கு வர்த்தகம் செய்து வந்த கேசிபி எஞ்சினியர்ஸ் நிறுவனம் 2018ல் ரூ. 453 கோடிக்கு வர்த்தகம்

*ரூ.34 கோடிக்கு வர்த்தகம் செய்து வந்த ஏசிஇ டெக் மெஷினரி நிறுவனம் 2018ல் ரூ.155 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது.  

இதேபோல் பி.செந்தில் அன்கோ, வரதன் இன்பராஸ்ட்ரக்சர், ஆலயம் பவுண்டேசன், உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்கள் மதிப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதையடுத்து முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களின் மின்னல் வேக வளர்ச்சி குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

Tags : AIADMK ,minister ,SP Velumani , மின்னல் வேக வளர்ச்சி
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...