ராமநாதபுரம் அருகே 15.98 லட்சம் கையாடல்: கூட்டுறவு சங்க செயலர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வெண்ணத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளராக சங்கர்ராமன் பணியாற்றினார். இவர் கடந்த 2014, ஏப்.1 முதல் 2015 அக்.26 வரையான காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கோவிந்தராஜன், கடந்த 2015 அக்.26ல் கூட்டுறவு சங்க பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தார்.

அப்போது ரூ.11 லட்சம்  இருப்பு குறைவு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேவிபட்டினம் கிளை சேமிப்பு தொகை ரூ.2.47 லட்சம் மற்றும் நகைக்கடன் ஒரு லட்சம் முறைகேடு, நகை மதிப்பீட்டாளருக்கு கூடுதல் கமிஷன் தொகை கொடுத்ததாக ரூ.24 ஆயிரம், உர விற்பனை தொகை ரூ.1.20 லட்சம் என ரூ.15.98  லட்சம் கையாடல் செய்தது தெரிந்தது. இதுபற்றி துணை பதிவாளர் கோவிந்தராஜன் வணிக குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்படி வணிக குற்ற புலனாய்வு பிரிவினர் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிந்து சங்கர்ராமனை(58) கைது செய்தனர்.

Related Stories:

>