×

சான்று பெறாத நெல் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை

திருவள்ளூர்: சென்னை மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் கலாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மையங்களிலும், தனியார் விற்பனை நிலையங்களிலும் வரும் சம்பா பருவத்திற்கு தேவையான டிகேஎம் 13, பிபிடி 5204 மற்றும் என்எல்ஆர் 34449 போன்ற நெல் ரகங்கள் வரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் சான்று பெறாத கலப்பட விதைகள் விற்பனை செய்தால் விதைகள் சட்டம் 1966 ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் சான்று அட்டை பொருத்தப்படாத தனியார் விதைகளை வாங்க வேண்டாம். விதை உரிமம் பெற்ற தனியர் விதை விற்பனையாளர்களிடமும், அரசு விரிவாக்க நிலையங்களில் மட்டுமே தகுந்த ரசீது பெற்று விதைகளை வாங்க வேண்டும். பதிவு எண், முளைப்புத் திறனுக்கான படிவம் 2 இல்லாமல் விற்பனை செய்யும் விதை விற்பனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உரிமமும் ரத்து செய்யப்படும்.


Tags : Zonal Seed Research ,Deputy Director , Strict action if uncertified paddy seeds are sold: Zonal Seed Research Deputy Director warns
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...