கொரோனா விழிப்புணர்வு பேரணி

புழல்: செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி சார்பில் கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி வளாகத்திலிருந்து புறப்பட்டு ஜி.என்.டி சாலை, அண்ணா பேருந்து நிலையம், திருவள்ளூர் கூட்டு சாலை வரை சென்று பேரூராட்சி அலுவலகம் வந்தடைந்தது. இந்த பேரணியில் அனைவரும் கட்டாயம்  முகக்கவசங்கள் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணியில் எமதர்மன் வேடமிட்டு கையில் பாசக் கயிறு வைத்து அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், பேரூராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் மதியழகன், தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

Related Stories:

>