மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் ஜி.ஜெயபால் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட தலைவர் கே.கஜேந்திரன், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். அப்போது, மக்களிடம் கொள்ளையடித்து முதலாளிகளை வளமாக்கும் பாஜக அரசின் கொள்களை கண்டித்தும், விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பெறக் கோரியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரியும், பொது துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்தும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஜெ.சுப்பிரமணி, எம்.சந்தானம், ஆர்.நடராஜன், எ.சீனிவாசன், பி.சரவணன், கே.ஆறுமுகம், என்.நித்தியானந்தம், ஆர்.தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் சிஐடியு மாவட்ட துணைத் செயலாளர் கே.அர்ஜுனன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், விவசாயிகள் சங்கத்தின் வட்டாரப் பொருளாளர் சிவக்குமார், கட்டுமான சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வி.ஆர்.லட்சுமணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>