மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் இன்றும், நாளையும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ரத்து: கலெக்டர் உத்தரவு

செங்கல்பட்டு: ஆதிராபராசக்தி சித்தர் பீடத்தில், ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு, கொரோனா பரவலை தடுப்பதற்காக, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதை, கலெக்டர் ராகுல்நாத் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் ஆடி அமாவசை, ஆடிப்பூரம் உள்பட பல நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, செங்கப்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிராபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு கஞ்சிபடைத்தல், பால் அபிஷேகம் செய்தல் முதலிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. இதனால், கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பொதுமக்கள் நலன் கருதியும் இன்று மற்றும் நாளை, மேற்கண்ட கோயிலில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய ரத்து செய்ய உத்தரவிடப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Related Stories: