சிவராத்திரி யாத்திரையில் மின் ஒயரை கையால் தொட்ட இளைஞன் பலி

கர்னல்: அரியானா மாநிலம் கர்னல் மாவட்டம் நக்லா மெகா கிராமத்தில் சிவராத்திரியையொட்டி ஷோபா யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. யாத்திரையில் பங்கேற்றவர்கள் வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தின் மேல் பெரிய ஸ்பீக்கர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதன்மேல், சில இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். இதற்கிடையில், ஸ்பீக்கரில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன், மேலே மின்சார ஒயரில் தொங்கிய காகிதத்தை அப்புறப்படுத்த முயன்றார்.

அப்போது, மின்சாரம் தாக்கியதில் அந்த இளைஞன் தூக்கி வீசப்பட்ட நிலையில் கீழே விழுந்தார். முன்னதாக அந்த இளைஞனை பிடித்த மற்ற 4 இளைஞர்களையும் மின்சாரம் தாக்கியதால், அவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதலின் மின்சார ஒயரை தொட்ட இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: