மோடி இந்த நாட்டின் ‘வெள்ளை பூஞ்சை’: காங். பெண் அமைச்சர் காட்டம்

நந்தூர்பார்: பிரதமர் மோடி இந்த நாட்டின் வெள்ளை பூஞ்சை நோய் தொற்று என்று, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் அமைச்சர் காட்டத்துடன் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பார் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடந்த  சுதந்திர தின நிகழ்ச்சியில், மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு  மாநில அமைச்சர் யசோமதி தாக்கூர் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘ஒன்றிய பாஜக அரசு இந்துவுக்கு எதிரானது. இந்துத்துவா என்பது, எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானது அல்ல. பிரதமர் மோடி இந்த நாட்டின் வெள்ளை பூஞ்சை வைரஸ் நோய்த் தொற்று.

நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் மற்றும் அவர்களது வாரிசுகளை கவுரவிப்போம். இதற்கான பிரசாரம் மகாராஷ்டிரா முழுவதும் நடத்தப்படும். தேசபக்தியின் சுடரை காங்கிரஸ் கட்சி மீண்டும் எரிய வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. சர்வாதிகாரத்திற்கு எதிராக, நாடு முழுவதும் மிகப்பெரிய  போராட்டம் நடத்தப்படும்’ என்றார். தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாராட்டி கவுரவித்த புகைப்படங்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

More
>