×

‘நீரஜ்’ என்ற பெயர் கொண்டவர்களுக்கு ரூ.501 மதிப்பில் ‘இலவச பெட்ரோல் ஆஃபர்’..! குஜராத்தில் ‘பங்க்’ நிர்வாகம் அதிரடி

பரூச்: குஜராத்தில் ‘நீரஜ்’ என்ற பெயர் கொண்டவர்களுக்கு ரூ. 501 மதிப்பில் இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பரூச்சில் உள்ள பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ராதங்கப் பதக்கத்தை வென்றார். இது ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் இரண்டாவது தங்கப் பதக்கம் மற்றும் தடகளத்தில் முதல் முறையாகும். நீரஜின் இந்த வரலாற்று சாதனையை நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், குஜராத் மாநிலம் பரூச் பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர், ஒரு அறிவிப்பை தங்களது பெட்ரோல் பங்கின் முகப்பில் வைத்துள்ளனர்.

அதில், ‘ரூ .501 இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும். ஆனால், ஒரு நிபந்தனை. இந்த இலவச பெட்ரோலை பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் நீரஜ் அல்லது நீரஜ் சோப்ரா என்று இருக்க வேண்டும். இதற்கான ஒரிஜினல் ஆவணத்தை காட்டிவிட்டு இலவசமாக பெட்ரோலை பிடித்து செல்லலாம். இந்த சலுகை இன்று (திங்கட்கிழமை) வரை மட்டுமே இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பார்த்து, பலர் இலவசமாக ரூ. 501 மதிப்பிலான இலவச பெட்ரோலை வாங்கிச் சென்றனர். அவர்களுக்கு, பங்க் ஊழியர்கள் பெட்ரோலுடன் பூங்கொத்து கொடுத்து கவுரவித்தனர். தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிப்பதற்காக, பெட்ரோல் பங்க் நிறுவனத்தினர் மேற்கொண்ட ‘இலவச பெட்ரோல்’ முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Tags : Neeraj ,Punk ,Gujarat , 'Free petrol offer' worth Rs 501 for those with the name 'Neeraj' ..! ‘Punk’ management in action in Gujarat
× RELATED அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும்...