×

ஈரோட்டில் சாய ஆலைகளில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளால் மாசடைந்துவரும் காவிரி நீர்

ஈரோடு: ஈரோட்டில் சாய ஆலைகளில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளால் காவிரி நீர் மாசடைந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் உள்ளன. இவை கழிவு நீரை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறை.

ஆனால் சில ஆலைகள் சட்டவிரோதமாக சாயக்கழிவுகளை வெளியேற்றும் நிலை தொடர்கிறது. ஈரோடு அக்ரஹாரம் அருகே பிச்சைக்காரன் பள்ளம் ஓடை வழியாக நுரை ததும்பும் நெடியுடன் சாய ஆலை கழிவுகள் காவிரி ஆற்றில் கலக்கின்றன. இதனால் ஆற்று நீர் மாசடைந்து பல மாவட்டங்களில் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பூஜ்ய டிஸ்சார்ஜ் முறைப்படி கழிவுநீரை வெளியேற்றும் சாய ஆலைகளை அகற்ற உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே விதிகளை மீறி காவிரி ஆற்றில் கழிவுநீரை வெளியேற்றி வரும் ஆலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Erotle , Cauvery water
× RELATED ஈரோட்டில் நாட்டுக்கோழி மோசடி...