×

எப்போதும் நம்பர் ஒன் பும்ரா: கே.எல்.ராகுல் பேட்டி

நாட்டிங்காம்: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் இந்தியா தோல்வி அடைந்தது. இதில் இந்திய முன்னணி பவுலரான பும்ராவின் பந்துவீச்சு எடுபடவில்லை. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 4, 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். இதனால் அவர் தனது பழைய பார்முக்கு திரும்பிவிட்டதாக பேசப்பட்டது.

இதுபற்றி இந்திய தொடக்க வீரர் கே.எல்.ராகுல் கூறியதாவது: பும்ரா பழைய பார்ம்முக்கு திரும்பிவிட்டார் என்று ஏன் சொல்கிறார்கள் என தெரியவில்லை. ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு ஆட்டத்திலும், அவர் தன்னை நிரூபித்துள்ளார். அவர் எங்கள் நம்பர் ஒன் பந்துவீச்சாளர். அவர் எங்கெல்லாம் விளையாடினாரோ, அங்கு எங்களுக்கு ஒரு வெற்றியாளராக இருந்தார் என்றார்.

Tags : Bumra ,KL Rahul , Always Number One Bumra: Interview with KL Rahul
× RELATED டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி