×

தைவானை புரட்டிப்போட்ட அதிதீவிர லூபிட் புயல்!: பாலத்தை அடித்து சென்ற வெள்ளம்..பல இடங்களில் நிலச்சரிவு..தவிக்கும் மக்கள்..!!

கவ்சியுங்: சீனாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய வெப்பமண்டல புயலான லூபிட், தைவாவின் தெற்கு பகுதிகளை புரட்டிப்போட்டிருக்கிறது. சூறைக்காற்று மற்றும் கனமழையால் கவ்சியுங், டோவியால், மியோலி ஆகிய நகரங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்திருக்கின்றன. புயல் கரையை கடந்துவிட்டாலும் தைவாவின் பல்வேறு நகரங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் தீவின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கவ்சியுங் நகரில் கட்டப்பட்டிருந்த புதிய பாலம் ஒன்றை வெள்ளம் அடித்து செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனமழை எதிரொலியாக தெற்கு தைவானில் உள்ள நீர்த்தேக்கங்கள் மளமளவென நிரம்பி வருகின்றன.

இதனால் அபாய அளவை எட்டியிருக்கும் அணைகள் அனைத்தும் திறக்கப்பட்டிருக்கின்றன. பாய்ந்து வெளியேறும் நீரை காண மக்கள் ஆவலுடன் திரண்டிருந்தனர். கனமழை மற்றும் வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் காணப்பட்டன. நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியதாக சியாயி பகுதி வாசிகள் தெரிவித்தனர். தற்போது மழை குறைந்திருப்பதால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தைவான் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக மேற்கொண்டிருக்கிறார்கள்.

தைவானில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கும் லூபிட் புயல், ஜப்பானை மிரட்டி வருகிறது. புயலால் ஜப்பானின் தெற்கு மற்றும் தென்மேற்கு பிராந்தியங்கள் பாதிப்பை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 90க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Tags : Taiwan , Taiwan, Lupit storm, flood, landslide
× RELATED மன்னிப்பு கேட்டார் தைவான் அமைச்சர்