×

நெல்லை அருகே சாலையோரத்தை ஆக்கிரமித்த முள்செடிகளை அகற்றிய போலீசார்-பொதுமக்கள் பாராட்டு

நெல்லை : நெல்லை அருகே கூடங்குளம் பகுதியில் விபத்துகள் ஏற்படுத்தும் வகையில் சாலையோரத்தை ஆக்கிரமித்திருந்த முள்செடிகளை அகற்றிய போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
 நெல்லை அருகே கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தவசிப்பாறை வளைவு அருகே நேற்று முன்தினம் காரும், காய்கறிகள் ஏற்றி வந்த வாகனமும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சிறுவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆறு பேரையும் கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் கூடங்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்த்தபோது, சாலையின் வளைவு பகுதிகளில் அதிக அளவில் முட்செடிகள் புதர்போல் ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது.

இதனால் அவர் இச்சாலையின் இரண்டு திசையிலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்பட காரணமாக இருக்கும் என்பதால் அந்த முட்செடிகளை அகற்றும்படி கூடங்குளம் போலீசாரிடம் அறிவுறுத்தினார். அதன்படி எஸ்ஐ வினுகுமார் தலைமையில் போலீசார் சாலையின் ஓரத்தில் ஆக்கிரமித்திருந்த முட்செடிகளை ஜேசிபி மூலம் நேற்று அகற்றினர். போலீசாரின் இச்ெசயலை வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாராட்டினர்.


Tags : Paddy , Nellai: Removed thorns occupying the roadside causing accidents in Kudankulam area near Nellai
× RELATED சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!:...