×

செங்கம் நகரில் பழுதடைந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

செங்கம் : செங்கம் நகரில் பழுதடைந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.  
செங்கம் நகரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் பழுதடைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் அருகாமையில் தனி கட்டிடமாக கட்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது.

இந்த அலுவலகத்தில் கோப்புகள் அலுவலக ஊழியர்களின் சம்பள பட்டியல் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலையில் ஊட்டச்சத்து திட்ட பணியாளர்கள் அமைப்பாளர்கள், உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அலுவலக பணிக்காக வந்து செல்வதும், பயிற்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் கூட்டங்கள் நடத்துவதும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் அந்த கட்டிடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்ததால் தற்காலிகமாக செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட 3 கி.மீ தூரத்தில் உள்ள மண்மலை கிராமத்தில் கிராம சேவை மைய கட்டிடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் முதல் பணியாளர்கள் வரை பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, பிடிஓ அலுவலக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தற்காலிக அலுவலகத்தை செங்கம் நகருக்குள் மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Cenkam City , Sengum: The public is expecting to renovate the dilapidated Integrated Child Development Project office in Sengum.
× RELATED பி.இ. மாணவர் சேர்க்கை: மே மாதம் ஆன்லைனில் விண்ணப்பம்