×

இணையத்தை கலக்கும் ரங்கன் வாத்தியார் மீம்ஸ்கள்

சென்னை: ரங்கன் வாத்தியார் தற்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் சினிமா கதாப்பாத்திரம். ஆர்யாவுடன் சைக்கிளில் செல்லும் நடிகர் பசுபதியை வைத்து உலகத்தின் அத்தனை விவகாரங்களையும் மீமாக ஆக்கிக்கொண்டிருக்கின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். சினிமா, அரசியல், விளையாட்டு, விஞ்ஞானம் என அனைத்தையும் ரங்கன் வாத்தியாரின் சைக்கிள் சீனை கொண்டே நகைச்சுவையோடு பதிவிட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆம்பள படத்தில், சண்டக்கோழி படத்தில் TVS-50- யில் வீலிங் செய்யும் கீர்த்தி சுரேஷ், வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் கவுண்டமணியின் ஆள் இன் ஆள் அழகுராஜா கதாப்பாத்திரம், அச்சம் என்பது மடமையடா படத்தின் சிம்புவும் மஞ்சுமாமோகனும் பைக்கில் செல்லும் காட்சி, கர்ணன் குதிரை சீன் என்று அனைத்து கதாப்பாத்திரங்களின் இடையிலும் ரங்கன் வாத்தியார் ஊடுருவி விட்டார் என்பதே சொல்ல வேண்டும்.

ஹாலிவுட்டில் வெளியான அவதார், அவெஞ்சர்ஸ் படங்களும் தப்பவில்லை. ரஜினி நடித்த படிக்காதவன் படத்தில் வரும் ராஜாவுக்கு ராஜா நான் தான் பாடலின் ரங்கன் வாத்தியாரின் ரீமேக் வெர்சனும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ரங்கன் வாத்தியாரை கொண்டு உருவாக்கப்படும் இந்த மீம்ஸ்களுக்கு முற்றுப்பிள்ளி வைக்க அதே ரங்கன் வாத்தியாரை கொண்டு மீம்ஸ்கள் உருவாக்குவது என்பது வேறு ரகம். நான் சுகர் பேஷண்ட் டா என்ன விட்டுருங்க டா னு படுப்பதை ஜெஞ்சுவது, நா பாட்டுக்கு செவனேனு தான இருந்தேன் வடிவேலு கூறும் டயலாக்கை ரங்கன் வாத்தியார் கூறுவது போன்ற மீம்ஸ்களுக்கும் பஞ்சம் இல்லை. ரங்கன் வாத்தியார் என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் நின்ற பசுபதி தற்போது மீம்ஸ்கள் மூலமாக இணையம் முழுவதும் நிறைந்திருக்கிறார்.


Tags : Rangan Vathiyar , Rangan Vathiyar memes mixing the internet
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...