ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய தடை வெறிச்சோடிய மாமல்லபுரம் கடற்கரை

மாமல்லபுரம்: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, ஆடி அமாவாசையில் கடற்கரை உள்ளிட்ட பகுதியில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், மாமல்லபுரம் கடற்கரை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. தமிழ் மாதம் ஆடி, தை அமாவாசை தினத்தில் கடற்கரை, ஆற்றாங்கரை, கோயில் குளம் போன்ற நீர்நிலை பகுதிகளில் இந்துக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். மாமல்லபுரம் கடற்கரையில் ஆண்டுதோறும் பலர் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர்.

இந்நிலையில், கொரோனா தொற்று 3வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடற்கரைக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அரசு தடை விதித்துள்ளது. ஒரு சிலர் நேற்று மாமல்லபுரம் ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் குளத்தில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும், பலர் தர்ப்பணம் கொடுக்க கடற்கரை மற்றும் கோயில் குளங்களுக்கு செல்லவில்லை. இதனால், மாமல்லபுரம் கடற்கரை கூட்டமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories:

>