ஜம்மு காஷ்மீரில் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை

ஸ்ரீநகர்: தடை செய்யப்பட்டுள்ள ஜமாத்- இ-இஸ்லாமி தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் இடங்களில் நேற்று அதிகாலையில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டது. பிரிவினைவாத நடவடிக்கைகள், தீவிரவாதிகளுக்கு ஆதரவான செயல்பாடுகள் காரணமாக கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் ஜமாத்- இ-இஸ்லாமி என்ற இயக்கம் தடை செய்யப்பட்டது.  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு இந்த தடை உத்தரவு அறிவிக்கப்பட்டது. அந்த இயக்கத்தின் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையை தொடர்ந்தே, ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் உறுப்பினர்கள் இயங்கி வருவதாகவும், தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பதாகவும் அரசுக்கு சமீபத்தில் ரகசிய தகவல் கிடைத்தது.  இதனால், ஜமாத் - இ- இஸ்லாமி இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் அலுவலகம், வீடுகள் என மொத்தம் 45 இடங்களில் நேற்று அதிகாலையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிரடி சோதனை மேற்கொண்டது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள தொடர்பான விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

Related Stories: