ஆந்திர முதல்வர் ஜெகனின் சித்தப்பா திருப்பதி அறங்காவலர் குழு தலைவரானார் சுப்பா ரெட்டி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவராக இருந்த சுப்பாரெட்டியின் பதவிக்காலம் கடந்த ஜூன் 21ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து தலைமை செயல் அதிகாரி ஜவகர்ரெட்டி சிறப்பு அதிகார குழு தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து சுப்பாரெட்டியின் பணிகளையும், ஜவகர் ரெட்டி கவனித்து வந்தார். இந்நிலையில் சுப்பா ரெட்டியை அறங்காவலர் குழு தலைவராக மீண்டும் நியமித்து ஆந்திர மாநில அரசு நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து விரைவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களும் நியமிக்கப்படுவார்கள் என   அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது முறையாக திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுப்பாரெட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: