×

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு சிபிஐ மேல்முறையீடு இன்று விசாரணை

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம், ஒன்றிய நிதியமைச்சராக பதவி வகித்தபோது, 2007ம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து சட்டத்திற்குப் புறம்பாக ரூ.305 கோடி முதலீடுகளை பெற்றதாகவும், இதற்கு செய்த உதவிக்காக இவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தி வந்த நிறுவனத்துக்கு ஐஎன்எக்ஸ் மீடியா லஞ்சம் கொடுத்ததாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக 2017ம் ஆண்டு மே மாதம் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.  சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீதான வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் மே 18ம் தேதி தடை விதித்தது. மேலும், சிபிஐ விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும்  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

நீதிமன்றத்தின் பாதுகாப்பில் உள்ள இந்த ஆவணங்களை பார்வையிட, சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களுக்கு விசாரணை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு, நீதிபதி முக்தா குப்தா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.


Tags : CBI ,INX Media , INX Media case, CBI, investigation
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...