மினி கால்பந்து சாம்பியன்ஷிப் தமிழக வீரர்கள் 6 பேர் உக்ரைன் பயணம்

கோவை: உக்ரைன் நாட்டில் நடைபெறவுள்ள உலக மினி கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் பங்கேற்கின்றனர். இவர்கள், நேற்று கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர். உக்ரைன் நாட்டில் உலக மினி கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வரும் 11ம் தேதி நடக்கிறது. மினி கால்பந்து என்பது ஆறு நபர்கள் விளையாடக்கூடிய போட்டி. இதில், இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த சவுமியா, ஜெயஸ்ரீ, ஹெப்சிபா, சஞ்சனா, தர்ஷினி மற்றும் ஜோஸ்வா என 6 பேர் தேர்வாகியுள்ளனர். பயிற்சியாளராக சிவசங்கர் உள்ளார். இவர்கள், நேற்று கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து உக்ரைன் செல்கின்றனர்.

Related Stories:

More
>