×

நாகை அருகே 150 மீட்டர் தூரம் திடீர் கடல் அரிப்பு: மீனவர்கள் அச்சம்

நாகை: நாகை நம்பியார் நகரில், கடற்கரையையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை தவிர கடற்கரை ஓரத்தில் கூரைகள் போடப்பட்டு அதில் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட கடல் அரிப்பால் அங்கு நிறுத்தியிருந்த பைபர் படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து நம்பியார் நகர் மீனவர்கள் கூறுகையில், 150 மீட்டர் தூரத்திற்கு திடீர் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னும் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டால் கடற்கரையை ஒட்டியுள்ள வீடுகள் மூழ்கும் அபாயம் உள்ளது. கடல் கொந்தளிப்பு எப்போது ஏற்படும் என தெரியாது. இரவு நேரங்களில் இதுபோல் திடீரென கடல் அரிப்பு ஏற்பட்டால் கடற்கரையை ஒட்டி வசிக்கும் குடும்பத்தினருக்கு ஆபத்து. ஏராளமான மின்கம்பங்கள் சேதம் ஏற்படும். எனவே கடற்கரையையொட்டி கருங்கற்களை கொட்ட வேண்டும் என்றனர்.

Tags : Naga , Dragon, sea erosion, fishermen, fear
× RELATED நாகையில் போக்குவரத்து மாற்றம்