ஆம்னி பஸ்களுக்கு ஜிஎஸ்டியில் 5% இருந்து விலக்கு தேவை: உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில். 2,400 ஆம்னி பேருந்துகள் வெளிமாநில உரிமம் பெற்று உள்ளன. இந்த 2,400 வெளிமாநில உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகளால் தமிழகத்துக்க வரவேண்டிய சாலைவரி, சேவைகட்டணங்கள் மற்றும் இதர வருவாய் வருடத்துக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுகிறது. குளிர்சாதன வசதியுள்ள ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கும் டிக்கெட் கட்டணங்களுக்கு 5% ஜிஎஸ்டி தொகை வசூலிக்கப்படுகிறது. கடந்த 16 மாதங்களாக 90 சதவீத ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் மிகவும் பாதிப்படைந்துள்ளோம். ஆகையால் வரும் 2 வருடங்களுக்கு 5% ஜிஎஸ்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து உதவிட வேண்டும்.

Related Stories:

>