×

தமிழகத்தில் 37 அணைகள் புனரமைப்பு பணிக்கு ரூ.610 கோடியில் உலக வங்கியுடன் அரசு ஒப்பந்தம்: முதலில் 5 அணைகளுக்கு விரைவில் டெண்டர்; நீர்வளத்துறை உயரதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின், 2வது கட்டமாக அணைகள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் 37 அணைகள் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ரூ.54.47 கோடி செலவில் சாத்தனூர் அணை, ரூ.7.65 கோடியில் கிருஷ்ணகிரி அணை, ரூ.18.44 கோடியில் கெலவரப்பள்ளி அணை, ரூ.7.72 கோடியில் விடூர் அணை, ரூ.34.69 கோடியில் மணிமுக்தாநதி அணை, ரூ.7.48 கோடியில் மிருகானந்தநதி அணை,ரூ. 4.25 கோடியில் சாத்தையாறு அணை, ரூ.8.40 கோடியில் இருக்கன்குடி அணை, ரூ.1.12 கோடியில் ராமநதி அணை, ரூ.2.50 கோடியில் வடக்கு பச்சையாறு அணை, ரூ.2.50 கோடியில் குண்டாறு அணை, ரூ.15.50 கோடியில் ஆணை குட்டம் அணை, ரூ.3 கோடியில் கடனாநதி அணை, ரூ.10.85 கோடியில் திருமூர்த்தி அணை உட்பட 37 அணைளில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், உலக வங்கியுடன் அணைகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.இதை தொடர்ந்து, முதற்கட்டமாக சோலையாறு, மேல் நீராறு, சாத்தனூர், கெலவரப்பள்ளி உட்பட 5 அணைகளின் புனரமைப்பு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, விரைவில் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படுகிறது.

Tags : World Bank ,Tamil Nadu ,Water Resources High Commissioner , Government signs agreement with World Bank at a cost of Rs 610 crore for the reconstruction of 37 dams in Tamil Nadu: tender for the first 5 dams soon; Water Resources High Commissioner Information
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...