×

வெப்பச்சலனம் காணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத் தில் சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூ டும். அதன் படி இன்று கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட் டிய (திருப் பூர், தென் காசி) மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங் க ளில் ஒரு சில இடங் ளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூ டும்.

அதேபோல் நாளை (9ம் தேதி) கோவை, நீலகிரி மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன ம ழை யும், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங் க ளில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூ டும். வருகிற 10ம் தேதி (செவ்வாய் கி ழமை) நீல கிரி, கோவை  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூ டும். அதே போல் வருகிற 11ம் தேதி (புதன் கி ழமை) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கன மழையும், தென் தமிழகம், டெல்டா மாவட்டங் க ளில் ஓரிரு இடங் களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூ டும்.

இதர மாவட் டங் கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அடுத்த நான்கு நாட் களுக்கு இடி,  மின் ன லு டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை யும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப் டும். நகரின் ஒரு சில பகுத களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூ டும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற் றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகக்கூ டும். மேலும் இன்று முதல் வருகிற 11ம் தேதி (புதன் கி ழமை) வரை தென் மேற்கு, வடக்கு மற் றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூ டும். அதே போல் கேரளக் கடலோரப் பகுதியை ஒட் டிய தென் கிழக்கு அரபிக் கடல்பகு தி கள்,  லட் சத் தீவு பகுதிகள், கேரளகர் நாடக கட லோரப் பகு திகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூ டும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண் டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Center , Tamil Nadu, 4 days, heavy rain, weather
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8...