ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சாமிநத்தம் கிராமத்தில் சானிடரி நாப்கின் தயாரிப்பு தொடக்கம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு: ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், தூத்துக்குடி சாமிநத்தம் கிராமத்தில் ஒரு சுகாதார நாப்கின் உற்பத்திப் பிரிவை தொடங்கி உள்ளது. இந்த திட்டம் பெல் சுமங்கலி சுயஉதவிக்குழு உரிமையாளர் அன்னலட்சுமி, மற்றும் ஸ்மைலி சுமங்கலிகள் குழுக்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 20பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவார்கள், சிறப்பாக செயல்படுவோர்க்கு, முழுநேர ஊழியர்களாக உற்பத்தி பிரிவில் சேர்க்கப்படுவார்கள்.

இந்த முயற்சியை தொடக்கிய ஸ்டெர்லைட் காப்பர் சிஓஓ, சுமதி கூறுகையில்,”இது பெண்களின் ஆரோக்கியத்திற்கான மிகவும் அவசியமான முயற்சியாகும், மேலும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இது மகத்தான பயனை அளிக்கும். இந்தத் திட்டம் தூத்துக்குடியிலுள்ள கிராமப்புறப் பெண்களின் நல்வாழ்வுக்கும், அவர்களின் ஆரோக்கியம் சார்ந்த சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும் உறுதி அளிக்கிறது. ஸ்டெர்லைட் காப்பர்.

சகித் திட்டத்தின் கீழ், இப்பகுதியில் பல திறன் பயிற்சி மற்றும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் வேதாந்தாவின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு முக்கியமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>