×

அம்மன் கோயில் திருவிழாவில் மார்பில் உரல் வைத்து உலக்கையால் பச்சரிசி, மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி: வேட்டவலம் அருகே பக்தர்கள் பரவசம்

வேட்டவலம்: வேட்டவலம் அருகே அம்மன் கோயில் ஆடி வெள்ளி திருவிழாவில் மார்பில் உரல் வைத்து உலக்கையால் பச்சரிசி, மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை பக்தர்கள் பரசவத்துடன் கண்டு களித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் 17ம் ஆண்டு ஆடி வெள்ளி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதனையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் பக்தர்கள் கரகம் சுமந்தவாறு வீதி உலாவாக கோயில் வளாகத்தை அடைந்தனர்.

மேலும் கோயில் வளாகத்தில் தலைப்குப்புற படுத்திருந்த பக்தர்களின் முதுகில் கரகம் சுமந்து வந்தவர்கள் ஏறி நடந்து சென்றனர். பின்னர் மாலையில் அம்மன் வீதி உலாவும், கூழ் வார்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான மார்பில் மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அதே கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற பக்தரின் மார்பில் உரல் வைத்து அதில் உலக்கையால் பச்சரிசி, மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மெய் சிலிர்த்தவாறு கண்டு களித்தனர்.

மேலும் இடிக்கப்பட்ட மாவை பிரசாதமாக சாப்பிட்டால் திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம் என்பதால் இதனை பக்தர்கள் பிரசாதமாக வாங்கி சென்றனர். பின்னர், இரவு அம்மன் ஊஞ்சல் தாலாட்டும், ஆன்மிக நாடகம் நடந்தது. நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.

Tags : Amman Temple Festival , Amman Temple festival in the world putting the URL in the chest and the raw rice, yellow demolition program: Vettavalam devotees at the rapture
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...