தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்: தலைவர்கள் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி(84) உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டு உள்ளது. திண்டிவனம் ராமமூர்த்தியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மாநிலங்களவை எம்பி, எம்எல்ஏ, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் ராமமூர்த்தி. 1967 முதல் 1971 வரை தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி.

1981 முதல் 1984 வரை தமிழ்நாடு சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தவர் ராமமூர்த்தி. 1984 முதல் 1990 வரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக இருந்துள்ளார் திண்டிவனம் ராமமூர்த்தி. சரத்பவரின் தேசியவாத காங்கிரஸின் தமிழக மாநில தலைவராகவும் இருந்துள்ளார் திண்டிவனம் ராமமூர்த்தி. அடுத்த சில மாதங்களிலேயே ராமமூர்த்தி தலைமையிலான கமிட்டியே கலைக்கப்பட்டு விட்டதாக அந்த கட்சியின் அகில இந்திய கமிட்டி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>