தி.நகர் பேருந்து நிறுத்தத்தில் இளம்பெண்ணுக்கு பிளேடு வெட்டு : வாலிபர் கைது

சென்னை: தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வருபவர் வர்ஷினி.  இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து  நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென  பிளேடால் வர்ஷினியை கிழித்துள்ளார். மேலும் அவரது கழுத்ைத அறுக்க முயன்றார். வலி தாங்க முடியாமல் அந்த பெண் அலறி துடித்ததால், அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர், இதுபற்றி மாம்பலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசாரிடம், அந்த வாலிபரை ஒப்படைத்தனர். மேலும் காயமடைந்த வர்ஷினியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிடிபட்ட வாலிபரிடம் விசாரித்தபோது, தூத்துக்குடி  மாவட்டத்தை சேர்ந்த சங்கர் என்பதும், இருவரும் ஒரே துணிக்கடையில் வேலை  செய்து வருவதும், இவர்கள் காதலித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அந்த இளம்பெண் சங்கரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர், அந்த பெண்ைண கொலை  செய்யும் முயற்சியில் பிளேடால் வெட்டியதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி  போலீசார் வழக்கு பதிவு செய்து  இருவரும் காதலித்தது உண்மையா, அல்லது ஒரு தலையாக காதலால் நடந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>