திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம்

சென்னை: அண்மையில் திமுகவில் இணைந்த ஆர்.மகேந்திரனுக்கு, திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மாதம் 8ம் தேதி திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக சட்டதிட்ட விதியின்படி திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக, டாக்டர் ஆர்.மகேந்திரன் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இவர் இணைந்துபணியாற்றுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>