×

கொரோனா சிகிச்சைக்காக ஆந்திராவில் ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கிறார் நடிகர் சோனு சூட்

மும்பை: பிரபல இந்தி நடிகர் சோனு நிகம் இப்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைத்து வருகிறார். முதல் ஆலை ஆந்திரா மாநிலம் கர்னூலில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைக்கப்படுகிறது. இரண்டாவது ஆக்சிஜன் உற்பத்தி ஆலை ஆந்திரா மாநிலம் நெல்லூர், ஆத்மகூர் மாவட்ட மருத்துவமனையில் அமைக்கப்படுகிறது. இவற்றை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலைங்களை அமைக்க நடிகர் சோனு சூட்டும், அவரது நண்பர்களும் முடிவு செய்துள்ளனர். கர்னூலிலும் நெல்லூரிலும் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளை அமைப்பதற்கு தேவையான அனுமதியை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் சம்பந்தப்பட்ட இதர அதிகாரிகள் ஆகியோரிடம் சோனு சூட் ஏற்கெனவே பெற்றுவிட்டார். இந்த நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் கர்னூலிலும், நெல்லூரிலும் அவற்றை சுற்றியுள்ள கிராமங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளிக்க பெரிதும் உதவும் என கூறப்படுகிறது. கர்னூல் அரசு மருத்துவமனையில் அமைக்கப்படவுள்ள ஆக்சிஜன் தயாரிப்பு நிலையம் பற்றி கலெக்டர் எஸ்.ராம்சுந்தர் ரெட்டி கூறுகையில், உண்மையில் நடிகர் சோனு சூட்டின் மனிதாபிமான உதவிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் கர்னூல் அரசு மருத்துவமனையில் தினமும் 150 முதல் 200 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் என்றும் கலெக்டர் தெரிவித்தார். சோனு நிகம் கூறுகையில், மக்களின், குறிப்பாக கிராமப்புற மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதுதான் இப்போதைய தேவை என்றார். இந்த ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் ஆந்திராவில் கொரோனா நோயை குணப்படுத்த பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். ஆந்திராவைப்போல் மற்ற மாநிலங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். எந்தெந்த மருத்துவமனைகளில் இந்த நிலையங்களை அமைக்கலாம் என்று ஆய்வு செய்து வருகிறோம் என்றும் சோனு சூட் தெரிவித்தார்.இந்தி சினிமா உலகில் அமிதாப் பச்சன் கத்திரினா கைப், அக்‌ஷய் குமார், அமீர் கான், ஆலியா பட், பூமி பெட்னேக்கர் ரண்பீர் கபூர், கோவிந்தா, மனீஷ் மல்கோத்திரா, விக்கி கவுஷல் உட்பட ஏராளமான பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். ஏப்ரல் 17ம் தேதி நடிகர் சோனு சூட்டுக்கம் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னணியில் அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைத்து வருகிறார். கொரோனாவின் முதல் அலை தாக்கிய போது மகாராஷ்டிராவில் சிக்கிய வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல சோனு சூட் பல உதவிகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post கொரோனா சிகிச்சைக்காக ஆந்திராவில் ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கிறார் நடிகர் சோனு சூட் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Mumbai ,Sonu Nikam ,Andhra ,Sonu ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...