திருவள்ளூரில் மின்சார திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்: அமைச்சரிடம் அனைத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை மனு

திருவள்ளூர்: தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் திருவள்ளூரில் மின்சார வாரிய திட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைக்கக்கோரி தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பொறுப்பாளர்கள் சிட்டா வாசுதேவன், ராமச்சந்திரன், மதுசூதனபாபு, ரமேஷ், ஒய்டிஎஸ்.மணி, சங்கர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் விவரம் வருமாறு, திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் பயனாளிகள் மின் இணைப்பு பெற்றுள்ளனர்.

இவர்கள் மின்சாரம் தொடர்பான குறைகளைத் தெரிவிக்க மின்சார வாரிய திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இல்லாததால், திருவள்ளூர் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு செல்லும் சூழல் உள்ளது. கடந்த ஆட்சியில் திருவள்ளூரில் மின்சார வாரிய திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது. எனவே திருவள்ளூரில் மின்சார வாரிய திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Related Stories:

More
>