மீஞ்சூர் ஒன்றியத்தில் மின் குறைதீர் கூட்டம்

பொன்னேரி: பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள் மற்றும் பொதுமக்களுக்கான மின்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணும் குறைதீர் முகாம் மீஞ்சூரில் உள்ள திருமண மாளிகையில் நடைபெற்றது. பொன்னேரி எம்எல்ஏர துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், தமிழ்நாடு மின்சார துறை செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கலந்துகொண்டு மின்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்தனர். இதில், மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>