×

யூடியூபர் துரைமுருகனுக்கு ஜாமீன்

மதுரை: திருச்சியைச் சேர்ந்த யூடியூபர் துரைமுருகன். இவர், அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக திருப்பனந்தாள் போலீசார் கடந்த ஜூன் 16ல் கைது செய்தனர். இந்த வழக்கில் திருவிடைமருதூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் துரைமுருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து தனக்கு ஜாமீன் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், இனிவரும் காலத்தில் யாரையும் புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட மாட்டேன் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, போலீசாரின் விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.

Tags : YouTube ,Thuraimurugan , YouTuber Dhuraimurugan, Bail
× RELATED லிஸி வெலாஸ்கோவெஸ்