கோக்ராவில் இருந்து இந்திய-சீன படைகள் வாபஸ்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கின் கோக்ராவில் இருந்து இந்திய - சீன படைகளை திரும்ப பெறும் நடவடிக்கை முழுவதும் முடிந்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.  காஷ்மீரில் கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியதை தொடர்ந்து, இந்தியா - சீனா இடையே கடந்தாண்டு மே மாதத்தில் இருந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இப்பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்க, இருநாடுகளும் நடவடிக்கை எடுத்துள்ளன. 9ம் கட்ட பேச்சுவார்த்தையின் முடிவின் பாங்காங் ஏரி பகுதியில் இருந்து இருநாட்டு ராணுவ வீரர்களும் திரும்ப பெறப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த வாரம்  நடந்த 12ம் கட்ட பேச்சுவார்த்தையில்,  கோக்ரா பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிழக்கு லடாக்கின் கோக்ரா பகுதியில் இருந்து இருநாட்டு வீரர்களும் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டு உள்ளனர். இவர்கள் தங்களின் நிரந்தர முகாம்களுக்கு திரும்பி விட்டனர். கோக்ராவில் இரு நாட்டு ராணுவத்தாலும் அமைக்கப்பட்ட தற்காலிக கட்டமைப்புகள், உள்கட்டமைப்புகள் அகற்றப்பட்டு விட்டன. மற்ற பகுதிகளில் இருக்கும் சிக்கல்களும் விரைவில் தீர்க்கப்படும்,’  என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>