×

கோவிஷீல்டு, கோவாக்சின் உற்பத்தியை பெருக்க திட்டம்: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: கோவிஷீல்டு, கோவாக்சின் தடு ப்பூசிகளின் மாதாந்திர உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில், ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துப்பூர்வமாக நேற்று அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ், கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி போடத் துவங்கியதில் இருந்து, கடந்த 5ம் தேதி வரை சீரம் நிறுவனம் 44.42 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியையும், பாரத் பயோடெக் நிறுவனம் 6.82 கோடி கோவாக்சின் தடுப்பூசியையும் விநியோகம் செய்துள்ளன. இந்த உற்பத்தியாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தடுப்பூசிகளின் மாதாந்திர உற்பத்தி அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி 11 கோடியில் இருந்து 12 கோடியாகவும், கோவாக்சின் 2.5 கோடியில் இருந்து 5.8 கோடியாகவும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மேலும் பல நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பு பணியில் ஈடுபட உள்ளன. அதற்கான அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை மேலும் 4 நிறுவனங்கள் தயாரித்து வழங்க உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்தாண்டு துவக்கத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி
சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனவல்லா டெல்லியில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியாவை  சந்தித்து பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘அரசிடமிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்கிறது. மூலப்பொருட்கள் கொள்முதல் செய்வதில் முன்பிருந்த நிதி நெருக்கடிகள் தற்போது இல்லை. சீரம் தயாரிக்கும் கோவாவாக்ஸ் தடுப்பூசி, வரும் அக்டோபரில் கிடைக்க வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் குழந்தைகளுக்கான கோவாவாக்ஸ் தடுப்பூசி தொடங்கப்படும் என எதிர்பார்க்கலாம்’’ என்றார்.

Tags : Govshield ,United States Information , Govshield, Kovacsin, United States Government, Information
× RELATED இனி உற்பத்தி, விநியோகம் இல்லை...