மாஸ்க்கை கழற்ற சொன்ன பெண்ணிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: முகக்கவசத்தை கழற்றுங்கள் நேரில் பார்க்க ஆசையாக உள்ளது என அன்பு கோரிக்கை விடுத்த ஓசூர் பெண்ணிடம் கைபேசியில் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மக்களை தேடி மருத்துவம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஓசூர் உழவர் சந்தை வழியே சென்ற முதல்வரை, சாலை ஓரம் இருந்த பெண் ஒருவர் நிறுத்தி தங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எனவே முகக்கவசத்தை கழற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். பெண்ணின் கோரிக்கையை ஏற்று முகக்கவசத்தை கழற்றிய முதல்வரை கண்டு மகிழ்ச்சியடைந்த பெண், விடாமுயற்சி..விஸ்வரூப வெற்றி..அதற்கு பெயர் தான் ஸ்டாலின் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சென்னை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த பெண்மணியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இதனால் மேலும் மகிழ்ச்சி அடைந்த பெண், இந்த நாளை தம்மால் மறக்க முடியாது என்றார். அப்பெண்ணின் மகளுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார். அப்போது தன்னுடைய தந்தையிடம் பேச வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளை ஏற்ற முதலமைச்சர், ஓசூருக்கு மீண்டும் வரும் பொழுது பேசுவதாக கூறியிருக்கிறார்.

Related Stories:

More
>